வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை மிகவும் உஷ்ணமான இருந்தது. பின்னர் பிற்பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 5 மணிக்கு ஆரம்பித்த மழை படிப்படியாக அதிகரித்தது தொடர்ந்து மிதமான மழை இருந்தது. 3 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெள்ளகோவில் நகரில் தாழ்வான பகுதியில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. பள்ளமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளகோவில், முத்தூர், வள்ளியரச்சல், மேட்டுப்பாளையம், மாந்தபுரம், குருக்கத்தி, புதுப்பை, நாச்சிபாளையம், வேலப்பநாயக்கன்வலசு, கரட்டுப்பாளையம், லக்கமநாயக்கன்பட்டி, தாசநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, கம்புளியம்பட்டி, உத்தமபாளையம், கள்ளமடை, மயில்ரங்கம் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது. இந்த மலை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதே போல் காங்கேயம் பகுதியில் நேற்று மாலை முதல் இரவு வரை மிதமான மழை பெய்தது. காங்கேயத்தில் 17. 4 மில்லி மீட்டர் மழையும் வெள்ளகோவில் 68. 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.