காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய குழு தலைவர் டி. மகேஷ் குமார் தலைமை வகித்தார். இதில், சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கரசம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் கோழிச் சந்தையை விரிவுபடுத்தி, ஊராட்சி ஒன்றியத்துக்கு வருவாயை அதிகரிக்கும் வகையில், ஆட்டுச் சந்தையாக மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பேசுகையில் பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த கவுன்சிலர் செல்வம் மற்றும் ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் பள்ளிகளுக்கு தேவையான வேலைகளை குறிப்பிடுகையில் பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி ஒன்றியத்தில் நிதி இல்லை என்றாலும் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் சொந்த நிதியில் இருந்து வேலைகளை செய்கின்றனர்அப்படியிருந்தும் பள்ளி விழாக்களில் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களை பள்ளி ஆசிரியர்கள் முன்னுரிமை கொடுக்காமல் விழா கொண்டாடுகின்றனர் என குற்றம் சாட்டினர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரி இனிமேல் இதுபோல் நடைபெறாமல் சரிசெய்து கொள்கிறோம் என உறுதிமொழி கொடுத்தார். 20 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜீவிதா ஜவஹர், வட்டார வளர்ச்சி அலுவலர் அனுராதா மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கொண்டனர்.