காங்கேயம் திருச்சி கோவை தேசிய நெடுஞ்சாலையை அகிலாண்டபுரம் மற்றும் அய்யாசாமி நகர் காலனி பிரிவு நால்ரோட்டிற்கு அருகே பல வருடங்களாக வேப்பமரம் ஒன்று இருந்தது. மரத்தின் கிளைகள் சாலையில் குறுக்கை நீட்டிக்கொண்டிருந்தது. இதன் கிளைகள் அவ்வழியாக செல்லும் பஸ்கள் லாரிகள் மற்றும் கனரா வாகனங்களின் மீது மோதிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் அவ்வழியாக சென்ற சரக்கு லாரி ஒன்று மரத்தின் மீது உரசியதால் மரக்கிளை முறிந்து கீழே விழுந்தது. அப்போது கீழே சென்ற மின் கம்பி மீது விழுந்ததால் மின்கம்பிகள் அறுந்து மின் கம்பம் உடைந்தும் சேதமாகியது. அதிர்ஷ்டவசமாக அவளியாக வேறு வாகனங்கள் ஏதும் செல்லாதால் விபத்து ஏற்படவில்லை. இதனால் போக்குவரத்து ஒரு வழி பாதையாக மாற்றி விடப்பட்டது. சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.