காங்கேயம் வீரணம் பாளையம் ஊராட்சி, பகவதி பாளையத்தில் விவசாயி வேலுச்சாமி (வயது 50) என்பவருக்கு தோட்டத்திற்குள் புகுந்த வெறிநாய்கள் 8 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 2 வெள்ளாடுகள் பலியானது, மீதமுள்ள 6 ஆடுகள் படுகாயம். இதனால் வேதனை அடைந்த விவசாயி 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆடுகளுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறுகையில் காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில் இதுவரை 1000 ஆடுகளுக்கு மேல் வெறிநாய்கள் கடித்து பலியாகி உள்ளது. மேலும் விவசாயிகள் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடை வளர்ப்பது தான் இன்றைய வாழ்வாதாரமாக இருந்து வருகின்றது. அவையும் தற்போது இந்த வெறி நாய்களால் பாதிக்கப்பட்டுகின்றன. தோட்டப்பகுதிகளில்கு புகுந்து அங்கு வளர்க்கக்கூடிய கால்நடைகளை கடித்து குதறும் வெறி நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
30க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இறந்த ஆடுகள் காயங்களுடன் ரத்தம் சொட்டச் சொட்ட எடுத்து வந்து வட்டாச்சியர் அலுவலகம் வளாகத்தில் வைத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.