நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் போத்தனூரைச் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 31). திருமணம் ஆகவில்லை. இவர் வெள்ளகோவில் உள்ள உறவினர் ஒருவருடன் தங்கியிருந்து சமையல் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வேலை சரியாக இல்லாததால் போதிய வருமானம் கிடைக்காமல் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அரவிந்த் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வெள்ளகோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.