சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று சென்னை சேப்பாக்கத்தில் மோதுகின்றன. இந்நிலையில் இதுகுறித்து சென்னை அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “சென்னையிடம் தரமான சுழற்பந்து வீச்சு உள்ளது. இங்கு, சென்னை அணியின் பலத்தை சமாளிப்பதற்கு ஏற்ப பெங்களூரு அணியினர் தங்களது ஆடும் லெவனில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். சேப்பாக்கம், சென்னை அணியின் கோட்டை என்பதை மறந்து விட வேண்டாம்” என்றார்.