கலைஞர் 45 வயதில் முதல்வராகலாம்? விஜய் ஆகக் கூடாதா?

57பார்த்தது
கலைஞர் 45 வயதில் முதல்வராகலாம்? விஜய் ஆகக் கூடாதா?
திமுக முன்னாள் தலைவர் கலைஞர் தமிழக முதல்வர் ஆனபோது அவருக்கு வயது 45, இளைஞரான கலைஞர் முதல்வர் ஆகலாம், ஆனால் விஜய் ஆகக் கூடாதா என தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வியெழுப்பியுள்ளார். சென்னையில் இன்று நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஆதவ், அரசியலுக்காக வருமானத்தை விட்டவர் விஜய். நாங்கள் ஊழல் செய்த பணத்தை லண்டன் சென்று செலவழிக்கவில்லை என்றார். மேலும், அரசியலில் சாதியை உருவாக்கியதே திமுகதான் எனவும் குற்றம்சாட்டினார்.

தொடர்புடைய செய்தி