ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு

72பார்த்தது
ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே பொதுத்தேர்வு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் நேற்று (மார்ச்.27) சதம் அடித்தது. இதனால், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஸ், வெயில் அதிகமாக உள்ள காரணத்தால், ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வு நடத்த பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி