தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "நமக்கு அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. இப்படியான சூழலில் நமது அரசியலை திசை திருப்ப அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது. திமுகவுக்கு பிரச்சனை வரும் போது அண்ணாமலை சரியாக உள்ளே வருவார் என கூறினார். இதன்போது அண்ணாமலையை ஆடு என கூறி ஆதவ் விமர்சித்தார்.