வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்

75பார்த்தது
வளர்ப்பு மகளை அடித்துக் கொன்ற தம்பதி - அதிர்ச்சி சம்பவம்
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் பஹீம் ஷேக் (35). இவரது மனைவி பவுசியா ஷேக் (27). இந்த தம்பதி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆயத் என்ற 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். நேற்று முன்தினம் தம்பதி இருவரும், உடல்நலம் பாதிக்கப்பட்டதாக குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றனர். இதுகுறித்து ஒருவர் அளித்த புகாரில் போலீசார் வந்து விசாரித்ததில், குழந்தை கொடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி