தமிழக சட்டப்பேரவையில் சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடுகிறது என்ற அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். "தமிழ்நாட்டில் எங்கும் அமைதி இல்லை, எங்கு பார்த்தாலும் போராட்டம் நடக்கிறது. செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானது அவமானம். போதைப்பொருள் விற்பனையைத் தடுக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தகவல் கொடுப்பவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது" என்றார்.