திருச்சியில் 2-வது மாநில பொதுக்குழு நடைபெற்றது: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். கண்ணகி குல செட்டியார்கள் பேரவை தீர்மானம்.
கண்ணகி குல செட்டியார்கள் பேரவை, தமிழ்நாடு அனைத்து செட்டியார்களின் அரசியல் சமூக பாதுகாப்பு இயக்கமாக செயலாற்றி வருகிறது. இதன் 2-வது மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி மத்தியம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சீனிவாச மகாலில் நடைபெற்றது.
கண்ணகி குல பூவையர் பாசறை மாநில பொதுக்குழு நித்யா கல்யாணசுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். பேரவை திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமண குமார் வரவேற்புரை ஆற்றினார். பொதுக்குழுவில் தலைமை ஒருங்கிணைப் பாளர் பாபு பத்மநாபன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மங்கள தேவி கண்ணகி அறக்கட்டளை பொருளாளர் பி. எஸ். எம். முருகன் வாழ்த்துரை வழங்கினார்.
கூட்டத்தில் தேனி மாவட்டம் கம்பம் மேகமலை கண்ணகி கோவிலுக்கு சென்று வழிபடும் வகையில் பளியங்குடி வழியாக பாதை அமைத்து உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணகி கோவிலை கேரள மற்றும் தமிழக அரசுகள் கம்பம் மங்கள தேவி அறக்கட்டளையிடம் கோவில் மற்றும் அதற்கான நிலத்தை ஒப்படைக்க வேண்டும். தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன