"தனியாக நின்று வெல்ல முடியாது என்பது சமரசம். கூட்டணி வைக்க வேண்டும் என்றால் ஏன் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டும்? ஒரே கட்சியாக இருந்து விட்டு போகலாமே? கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பது ஏமாற்று வேலை. அரசியலுக்காகவும், கட்சிக்காகவும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தால் மக்கள் நலனில் அக்கறை எப்படி இருக்கும்?" என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.