துறையூர்-பூட்டி இருந்த வீட்டில் 36சவரன் தங்கநகைகள் திருட்டு

55பார்த்தது
துறையூர் அருகே உள்ள சித்திரப்பட்டி சேர்ந்தவர் பாஸ்கர் இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் பிரேம் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். பாஸ்கரின் மனைவி ராணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக டெல்லியில் வசிக்கும் பாஸ்கர் ராணி தம்பதியினரின் மகளுக்கு குழந்தை பிறந்ததை அடுத்து மகளுக்கு துணையாக இருப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ராணி டெல்லிக்கு சென்றார்.
இந்நிலையில் அவர்களது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு சென்னையில் வசிக்கும் பிரேமிற்கு அக்கம் பக்கத்தினர் தகவல் அளித்தனர். பிரேம் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இரும்பு இரும்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 36 சவரன் தங்க நகைகளை லாக்கரை உடைத்து மர்ம அவர்கள் திருடியது தெரியவந்தது இது குறித்து பிரேம் துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் அவர்களது வீட்டில் 36 சவரன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டி இருந்த வீட்டில் 36 சவரன் தங்க நகைகள் திருடு போன சம்பவம் துறையூர் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி