குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

535பார்த்தது
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 தினங்களில் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், 11-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி