இந்தியாவில் சிறந்த கல்வி முறை ஒன்று இருக்கிறது என்றால் அது கலைஞர் கருணாநிதி தந்த கல்விமுறை தான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மறைமலைநகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள், நமது பாடத்திட்டத்தை குறை சொல்கின்றனர். தமிழ்நாடு அரசின் பள்ளிப்பாடத்திட்டம் சரியில்லை என்று புரளி கிளப்புகின்றனர்" என்று காட்டமாக கூறியுள்ளார்.