உலகிலேயே அமெரிக்க நாட்டில் தான் ஐஸ்கிரீம் அதிகமாக சாப்பிடப்படுகிறது. இதற்கு அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நார்வே உள்ளன. ஐஸ்கிரீமில் மிகவும் பிரபலமான சுவை வெண்ணிலா தான். அதற்கடுத்ததாக சாக்லேட் உள்ளது. ஆனால் வெண்ணிலாவிற்கு முன்னரே சாக்லேட் சுவை கண்டுபிடிக்கபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கிரீமில் 273 கலோரிகள் உள்ளன. முதன் முதலில் ஐஸ்கிரீம் செய்முறை புத்தக வடிவில் 1665-ல் எழுதப்பட்டது.