சர்வதேச அளவில் திருவள்ளுவர் கலாசார மையம் முதன்முதலில் சிங்கப்பூரில் அமைய உள்ளது. அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் திருவள்ளுவர் கலாசார மையம் குறித்து அறிவித்தார். மேலும், உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என மக்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்த நிலையில் அதை நிறைவேற்றும் வகையில் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.