திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நடைபெறும் இந்த புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான பூமி பூஜை நிகழ்வில் கலந்து கொண்ட பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு அடிக்கல்லை நட்டு வைத்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.