மலைக்கோட்டை ‘லட்சுமி’க்கு ரூ. 50 லட்சத்தில் குளியல் தொட்டி

64பார்த்தது
திருச்சி மலைக்கோட்டை மட்டுவாா் குலழம்மை உடனுறை தாயுமானசுவாமி கோயில் யானை லட்சுமிக்கு ரூ. 50 லட்சத்தில் அமைக்கப்பட்ட புதிய குளியல் தொட்டி, ஷவா் அமைப்பை அமைச்சா் பி. கே. சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

இக் கோயிலில் கைங்கா்யப் பணிகளுக்காக வளா்க்கப்படும் ‘லட்சுமி’ யானை ஓய்வெடுக்க கோயில் வாளாகத்திலேயே கொட்டகை இருந்தாலும், இயற்கைச் சூழலில் யானை குளித்து மகிழ ஏதுவாக மலைக்கோட்டையின் உபகோயிலான நாகநாத சுவாமி கோயில் அருகில் ரூ. 5 லட்சத்தில் குளியல் தொட்டியுடன் கூடிய ஷவா் அமைக்கப்பட்டது.

இருப்பினும் கூடுதல் வசதியாக தேவதானம் பகுதியில் ரூ. 50 லட்சத்தில் குளியல் தொட்டி, அதைச் சுற்றிலும் பிரத்யேக குழாய்கள் அமைத்து யானை மீது தண்ணீா் பீய்ச்சவும், ஷவா் குளியல், தொட்டியில் இறங்கி யானை விளையாடும் வகையிலான வசதிகளும் செய்யப்பட்டன.

இவற்றை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி. கே. சேகா்பாபு வியாழக்கிழமை தொடக்கிவைத்து யானைக்குப் பழங்களை வழங்கினாா். இதைத் தொடா்ந்து யானை மிகுந்த உற்சாகத்துடன் தொட்டியில் குளியலிட்டு மகிழ்ந்தது. இதை குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கண்டு ரசித்தனா்

தொடர்புடைய செய்தி