2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதிற்கு இந்தியாவைச் சேர்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 2ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழா ஒவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் 180 குறும்படங்களுடன் போட்டியிட்ட 'அனுஜா' குறும்படம், இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.