திருச்சி: கஞ்சா விற்ற மூன்று பேர் கைது
திருச்சி இடங்களைப் பற்றி புதூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது ராம்ஜி நகர் மலையப்பப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இதேபோல் ராம்ஜி நகர் மில்க் காலனி மயானம் அருகே பஞ்சாபி நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே எடைமலைப்பட்டி புதூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில் துவாக்குடி மலையை சேர்ந்த லோகேஷ் என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரையும் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பெரிய கடை வீதி அருகே கஞ்சா விற்ற கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை சேர்ந்த ஏழுமலை என்பவரை காந்தி மார்க்கெட் போலீசார் கைது செய்தனர்.