திருவெறும்பூர்: மேல்நிலை நீர் தேக்க தொட்டியை திறந்த அமைச்சர்
திருவெறும்பூர் அருகே உள்ள கிழக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நத்தமாடிப்பட்டி பகுதியில் 2020 மற்றும் 2021 வது நிதியாண்டில் ரூ 24. 60 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவில் , திருச்சி மாவட்ட ஊராட்சி இயக்குனர் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர் ஒன்றிய கழகச் செயலாளர் கங்காதரன் ஊராட்சி மன்ற தலைவர் ஜோஸ்பின் ஜெயராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.