திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

54பார்த்தது
திருச்சியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கல்பாளையத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெல்சியா சந்தனமேரி, பார்வையற்றவர். இவரது தாயார் இருதயமேரி. இவர்களது பக்கத்து வீட்டில் வசதிக்கும் சிலர், இருதயமேரிக்கு சொந்தமான வீட்டை தங்களுக்கு கிரையமாக கொடுக்கும்படி கேட்டு மிரட்டி வருகிறார்கள். அதற்கு இருதயமேரி மறுத்து விட்டதால் தொடர்ந்து அந்த குடும்பத்தினர் இருதயமேரி, அவரது மகள் ஆகியோரை தாக்குவதும், திட்டுவதுமாக தொந்தரவு செய்து வருகிறார்களாம்.

இது குறித்து மணப்பாறை போலீசில் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இன்று பெல்சியா சந்தனமேரி மற்றும்
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்து தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தங்களை தொந்தரவு செய்யும் பக்கத்து வீட்டுகாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். எஸ். பி. அலுவலகத்திலும்,
கலெக்டர் அலுவலகத்திலும் இது தொடர்பாக மனு கொடுத்தனர்.

தொடர்புடைய செய்தி