சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி விடுதியில் முதலாமாண்டு மாணவர்களை Home Work எழுதச் சொல்லி ராகிங் செய்த விவகாரத்தில், 3ஆம் ஆண்டு மாணவர்கள் மூவரை விடுதியில் இருந்து 6 மாதங்கள் நீக்கியும், தலா ரூ.25,000 அபராதம் விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், காவல்துறை உதவி ஆணையர் அடங்கிய குழுவினர் நடத்திய விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.