தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய், திரைத்துறைக்கு வந்து 33ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதனை கொண்டாடும் வகையில், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் பெண்கள் ஒன்று கூடி தங்கத் தேர் இழுத்தனர். சென்னை புறநகர் மாவட்ட மகளிர் அணியைச் சேர்ந்த பவித்ரா தமிழரசன் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, தங்கத் தேரை இழுத்த பெண்கள், விஜய்க்காக சிறப்பு வழிபாடு செய்தனர்.