14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டின் பேரரசர் மான்சா மூசா மாலிக்கு சொந்தமாக ஏராளமான தங்க சுரங்கங்கள் இருந்தன. 1324-ம் ஆண்டு மூசா மெக்காவிற்கு பயணம் செய்த போது 1000 ஒட்டகங்களில் தங்கக் கட்டிகள் நிரப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த பயணத்தின் போது 18 டன் (18000 கிலோ) தங்கத்தை மூசா கொண்டு சென்றதாக வரலாறு கூறுகிறது. ஒரு பயணத்திற்கே இவ்வளவு தங்கத்தை எடுத்துச் சென்றார் என்றால் அவரிடம் எவ்வளவு தங்கம் இருந்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.