டேஸ்ட் அட்லஸ்' என்ற நிறுவனம் உலகளவில் மக்களால் ரசித்து ருசிக்கப்படும் உணவுகளின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் அறிமுகமானதாக கூறப்படும் சிக்கன் 65 மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே உணவு என்கிற பெருமையை சிக்கன் 65 பெற்றுள்ளது. அதேபோல் தென்கொரியாவின் வறுத்த சிக்கன் உணவான 'சிக்கின்' முதலிடத்தையும், ஜப்பான் நாட்டின் 'காரகே' 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.