தெற்கு டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியில் ராஜேஷ் தன்வார் (55), அவரது மனைவி கோமல் (47), மகள் கவிதா (23) மற்றும் மகன் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இன்று காலை 5 மணி அளவில் நடைபயிற்சிக்கு சென்ற மகன் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த தந்தை, தாய், சகோதரி மூவரும் கத்தியால் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். இதனைப் பார்த்த மகன் அதிர்ச்சியடைந்தார்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.