இந்திய முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், தான் தோனியிடம் பேசி சரியாக 10 வருடங்கள் ஆகிறது என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். “சென்னை அணியில் விளையாடும் போது போட்டி குறித்து மைதானத்தில் பேசுவதைத் தவிர அவரிடம் நான் வேறு எதுவும் பேசியதில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஹர்பஜனின் இந்த பேச்சு, அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதை வெளிப்படையாக காட்டுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.