பொதுவாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். ஆனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் வீசிய ஃபெஞ்சல் புயல் காரணமாக தென் மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்தது. இதன் காரணமாக நவ.30-ல் 3 கோடி யூனிட்களும், டிச.1-ல் 5.56 கோடி யூனிட்களும், டிச.2-ல் 5.88 கோடி யூனிட்களும் மின்சாரம் கிடைத்துள்ளன. இந்த மின்சாரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்காக அனல் மின் உற்பத்தி மற்றும் கொள்முதலை மின்சார வாரியம் குறைத்துள்ளது.