திருவண்ணாமலை மாவட்டம் பவள குன்று மலையில் கடந்த 1ம் தேதி வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி பலியானோரில் 7 பேர் உடல் மீட்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், 6 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கண்டெடுக்கப்பட்ட உறுப்புகள் ராஜ்குமாருடையது, 7வது உடலை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தேசிய பேரிடர் மீட்பு குழு தெரிவித்துள்ளது.