கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் பழையபேட்டை பகுதியில் உள்ள சையத் பாஷா மலையில் இருந்து ராட்சத பாறை ஒன்று சரிந்து விழுந்துள்ளது. அந்தப் பாறையானது உருண்டு வந்து கீழே இருந்த வீட்டின் சுற்றுச்சுவர் மீது விழுந்து. இதில் அந்த சுற்றுச்சுவர் இடிந்து சேதமடைந்தது. அச்சமயத்தில் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.