மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி அபார வெற்றி பெற்றது. மாநிலத்தின் புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்த நிலையில் மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை (டிச. 05) இவர் முறைப்படி பதவியேற்க உள்ளார்.