திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் எலமனூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளன. அப்பகுதி விவசாயிகள் தங்கள் வயலை சென்றடைய 40 அடி தூரம் கொண்ட ஒரு கொடிங்கால் வாய்க்காலைக் கடந்து செல்ல வேண்டும். அவர்கள் கடந்து செல்ல இதுவரை ஒரு பாலம் கூட இல்லாத அவல நிலை தொடர்கிறது. தென்னை மரத்தை பாலமாக பயன்படுத்தி வருவதால் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகியுள்ளது.