துவரங்குறிச்சி செல்போன் கடையில் பூட்டை உடைத்து திருட்டு
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சேர்ந்தவர் அப்துல் கலாம் மகன் ஜாவித் சலீம் இவர் துவரங்குறிச்சி பகுதியில் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம்( நவ. 21) இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். நேற்று காலை திறக்கச் சென்ற நிலையில் கடையில் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது 15 செல்போன்கள் மற்றும் பத்து ஸ்மார்ட் வாட்ச்கள் ரூ. 47,000 ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஜாவித் சலீம் அளித்த புகாரின் அடிப்படையில் துவரங்குறிச்சி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.