தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெறவில்லை. திமுக ஆட்சிதான் நடைபெறுகிறது என அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், கூட்டணியில் பங்கு இருக்கும். ஆட்சியில் பங்கு என்பது எப்பொழுதும் கொடுத்தது இல்லை என்று கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை முன்வைக்கும் நிலையில், அமைச்சர் ஐ.பெரியசாமியின் இப்பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.