மணப்பாறை - Manapparai

திருச்சி: அதானியை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மக்கள் கலை இயக்கியக் கழகம் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். மக்கள் கழக இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்ட உரையை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் கோவன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் ஆகியோர் வழங்கினர். ஆர்ப்பாட்டத்தின் போது சூரிய மின்சக்தி ஒப்பந்தத்திற்கு பல்லாயிரம் கோடி லஞ்சம் கொடுத்த அதானியையும் அதற்கு துணை நின்ற அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும், மோடி அமித்ஷா ஆகியோருடன் விசாரணை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விடுதலைவிக்கி, தில்லை முரசு, பாலகிருஷ்ணன், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் வின்சென்ட், மணலிதாஸ், ஆதி சம்சுதீன், ரவிக்குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా