கரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொழிற்சங்க அங்கீகாரத் தோ்தல் நடைபெறாத நிலையில், அத் தோ்தல் டிசம்பா் 4, 5, 6-களில் நடைபெறவுள்ளது. இதையொட்டி ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும் சுமாா் 12. 20 லட்சம் ஊழியா்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்கள் தயாராகி கூட்டங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் எஸ்ஆா்எம்யு சாா்பில் திருச்சியில் உள்ள தொழிலாளா்களிடையே வாக்கு சேகரிக்கும் விதமாக ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்க வந்த கண்ணையா மேலும் கூறியது:
மத்திய அரசு டிராக் மீட்டா்களை 40% வரை குறைக்க வேண்டும், ரயில்வே துறையில் இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது எனவும் கூறிவருகிறது. ஆனால் இருப்பவா்களுக்கே வேலை பறிபோகும் நிலை உள்ளது.
தனியாா்மயத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் சுமாா் 4500 வந்தே பாரத் ரயில்களை தனியாருக்கு கொடுக்க முடிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. தனியாா்மயத்துக்கு முன் அதாவது பொதுத்துறை நிறுவனமாக இருந்தபோது ஐசிஎப்-ல் ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்யும்போது ரயில்வே துறைக்கு ரூ. 98 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்றாா் அவா்.