திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள பெரிய ஏரியானது சுமார் 238 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும் இந்த ஏரியின் நீர் பாசனத்தை நம்பி இப்பகுதியில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன இந்நிலையில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியான பச்சை மலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தினமும் பெய்த கனமழையின் காரணமாக துறையூர் பெரிய ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது இதைத்தொடர்ந்து இன்று காலை துறையூர் பெரிய ஏரியானது நிரம்பி வழிந்தது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக நவம்பர் டிசம்பர் மாதங்களில் துறையூர் பெரிய ஏரியானது நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியிலிருந்து வழிந்து ஓடும் நீர் துறையூர் சின்ன ஏரியை கடந்து சிங்களாந்தபுரம் ஏரியை சென்றடையும். சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் தற்போது இந்த ஏரியின் நீர் பாசனத்தை நம்பி உள்ளன. இதை அடுத்து இப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.