தேசிய முந்திரி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. முந்திரி விவசாயத்தை காக்கவும் முந்திரி விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. முந்திரியை மத்திய அரசு அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதே போல், முந்திரி விவசாயிகளுக்கு உயர்தர முந்திரி கன்றுகளை இலவசமாக வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட முந்திரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.