ரூ.563 கோடி முதலீட்டில் மிச்செலின் நிறுவனம் விரிவாக்கம்

79பார்த்தது
ரூ.563 கோடி முதலீட்டில் மிச்செலின் நிறுவனம் விரிவாக்கம்
ரூ.563 கோடி முதலீட்டில் மிச்செலின் டயர் தயாரிப்பு நிறுவனம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய மிச்செலின் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. 1.92 லட்சம் சதுர அடியில் உள்ள ஆலையை 2.06 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்து பிரீமியம் டயர்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக மிச்செலின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி