குரும்பூரில் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை
குரும்பூரில் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று மாநில பயனியர் நலச்சங்கம் தலைவர் சாந்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்செந்தூரில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் குரும்பூரில் நிற்காமல் செல்கின்றன. திருச்செந்தூர் முழுவதும் காவல்துறையால் தடுப்பு சுவர் கட்டி (Barry guard) வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரல், குரும்பூர், சாயர்புரம், மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் இந்த ரயிலில் பயணம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கு எந்த ஏற்பாடும் ரயில்வே துறையில் செய்யப்படவில்லை. ஆகவே வருங்காலங்களில் குரும்பூரில் கண்டிப்பாக நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.