தாமிரபரணி ஆற்றின் வழித்தடங்கள், குளங்களில் கனிமொழி ஆய்வு

56பார்த்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாமிரபரணி ஆற்றின் வழித்தடங்கள் மற்றும் குளங்களில் செய்துள்ள முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து பாராளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்


தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தாமிரபரணி ஆற்றின் வழித்தடங்கள் மற்றும் குளங்கள், கால்வாய்களின் உறுதித்தன்மை மற்றும் சீரமைக்கப்பட்ட மதகுகள் உள்ளிட்ட முன்னேற்பாடுபணிகள் குறித்து பாராளுமன்ற திமுக குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு மேற்கொண்டார் அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் உள்ள குட்டைக்கால் குளம், சென்னல்பட்டி - முக்காவர் கால்வாய், மருதூர் மேலக்கால் - அனைக்கட்டு, கீழக்கால் கால்வாய் - வல்லநாடு - மணக்கரை, கீழக்கால் கால்வாய் - ஆழ்வார்கற்குளம் - தோழப்பன்பண்ணை, கஸ்பா, கோரம்பள்ளம் குளம் ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்ற கனிமொழி கருணாநிதி எம்பி ஆய்வு மேற்கொண்டார் தற்போது நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் நடைபெறக்கூடிய பணிகள் விரைவாக நடைபெறவும் அதிகாரிகளை அறிவுறுத்தினார் இந்த ஆய்வின் போது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சி தலைவர் இளம் பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி