தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோவில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா வருகிற நவம்பர் 1ம் தேதி துவங்குவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வருகிற நவம்பர் 7ஆம் தேதி நடைபெறும் சூரசம்கார விழாவிற்காக 10 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பணியில் நான்காயிரம் போலீசார் ஈடுபடுத்த உள்ளனர் மேலும் 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க பட உள்ளதாகவும் கடந்த ஆண்டை விட கூடுதலாக சுமார் 250 பேருந்துகள் இயக்கவும் மருத்துவம் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் திருக்கோயில் அறங்காவல் குழு தலைவர் அருள் முருகன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் கூடுதல் கண்காணிப்பாளர் எடிசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பில் இணை ஆணையர் ஞானசேகரன் திருச்செந்தூர் வருவாய்சியர் குமாறன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.