தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மாதவன் குறிச்சி கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினர் மேலூர் கீழவூர் என இரண்டு பகுதிகளாக பிரித்து வசித்து வந்துள்ளனர்
இரு பிரிவை சேர்ந்தவர்களும் பயன்படுத்தி வந்த பொதுப் பாதையை கடந்த 2019 ஆம் ஆண்டு மேலூர் பகுதியை சேர்ந்தவர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் எங்கள் பகுதிக்குள் நீங்கள் வரக்கூடாது என்று தீண்டாமை சுவரை எழுப்பியுள்ளனர்
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாதவன் குறிச்சி கீழூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்செந்தூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தனர் இந்த மனுவை விசாரித்த திருச்செந்தூர் கோட்டாட்சியர் கடந்த ஒன்று1/ 10 /2024 ஆம் ஆண்டு அந்த சுவரை இடித்து பாதையை ஏற்படுத்த உத்தரவு பிறப்பித்தார்
ஆனால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகியும் இதுவரை தீண்டாமை சுவரை அகற்ற அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாதவன் குறிச்சி கீழவூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் அமைக்கப்பட்ட தீண்டாமை சுவரை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது ஆதார் கார்டு ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.