தசரா திருவிழா; விதவிதமான வேடம் அணிந்து வலம் வரும் பக்தர்கள்

54பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது குலசேகரப்பட்டினம் இங்கு அமைந்துள்ள அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவிலானது தமிழகத்தில் தசரா திருவிழாவிற்கு மிகவும் பெயர் போனதாகும் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனுக்காக விதவிதமான வேடம் அணிந்து ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று முத்தாரம்மனுக்கு செலுத்துவது இந்த தசரா திருவிழாவில் சிறப்பு அம்சமாகும் காப்பு கட்டி விரதம் இருக்கும் பக்தர்கள் தங்களின் மனதிற்கு தோன்றிய வேடங்களை அணிகிறார்கள் அதன்படி தெய்வ வேடங்களான காளி முருகன் விநாயகர் கிருஷ்ணன் ராமர் வள்ளி என்றும் விலங்குகள் வேடங்களாக குரங்கு கரடி சிங்கம் மற்றும் பொதுவான வேடங்களான ராஜா ராணி குறத்தி பெண் கோமாளி பூதம் போன்ற வேடங்களையும் அணிந்த பக்தர்கள் ஊர் ஊராக தனியாகவும் குழுக்களாகவும் சென்று காணிக்கை பெற்று வரும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் சுற்றியுள்ள உடன்குடி திருச்செந்தூர் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில் முகாமிட்டுள்ளனர் மேள வாக்கியங்கள் முழங்க வேடம் அணிந்த பக்தர்கள் இசைக்கேற்ப நடனமாடி காணிக்கை வசூலில் ஈடுபடுகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி