ஜெல்லி மீன்கள் கடற்கரை ஒதுங்குவதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

64பார்த்தது
தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் கயஸ் கூறுகையில் திருச்செந்தூர் பகுதியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்.

மேலும் திருச்செந்தூர் அருகே உள்ள கடல் பகுதிகளில் கல்லாமொழி அருகே நிலக்கரி இறக்குமதிக்காக அமைக்கப்படும் இறங்குதலத்திற்கு பவளப்பாறைகள் உடைக்கப்படுவதால் ஜெல்லி மீன்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக ஜெல்லி மீன்கள் திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் ஒதுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு பவளப்பாறைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில் நாட்டுப் படகு மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் தொகை பிடிக்கப்படுகிறது அதனால் என் மீனவர்களுக்கு எந்த வித பயனும் கிடையாது எனவே மீனவர்கள் பயன்பெறும் வகையில் அதை மாற்றி அமைக்க வேண்டும் மேலும் தமிழக அரசு நாட்டுப் படகுகளுக்கு இஞ்சின் மானியம் வழங்குவதை இரண்டு ஆண்டுகளாக மாற்றி அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி