சென்னை ரூ.63,246 கோடி மதிப்பிலான மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு, கனிமொழி எம்பி தனது ‘X’ தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அதில், “ முதலமைச்சர் டெல்லி பயணத்தின் போது இந்த நிதியைப் பாதுகாப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக அவரது தலைமையின் கீழ் சென்னையை உலகளாவிய மையமாக மாற்றுவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியை இந்த மைல்கல் குறிக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.