அமைச்சர் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

1078பார்த்தது
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளவுக்கு அதிகமாக பல கோடி ரூபாய் சொத்து சேர்த்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு சாட்சியாக இணைக்க வேண்டும் என மனு செய்துள்ளது.

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆஜராகாத நிலையில் அவரது மகன்கள் ஆனந்த பத்மநாபன் அனந்த ராமகிருஷ்ணன் அனந்த மகேஸ்வரன் மற்றும் அமைச்சரின் தம்பி சண்முகநாதன் ஆகிய நான்கு பேர் ஆஜராகினர்.

இந்த வழக்கில் அரசு தரப்பு 16-வது சாட்சியை மறு விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் மேலும் வழக்கு தொடர்பான சில ஆவணங்களில் குறியீடு செய்ய வேண்டுமென என அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு சார்பில் இன்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் யாரும் ஆஜராகாத நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கறிஞர் ஆஜராகி இருந்தார். இதைத் தொடர்ந்து வழக்கை விசாரணை செய்த மாவட்ட நீதிபதி ஐயப்பன் வழக்கு விசாரணையை அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மனு மீதான உத்தரவு வருகிற ஜூன் 19ஆம் தேதி வரும் வாய்தாவில் பிறப்பிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

தொடர்புடைய செய்தி